நினைவுகள்….

என் உயிரை உறிஞ்சி எடுப்பதற்கு பதிலாக
உன் நினைவை எடுத்து செல்!
கொஞ்சம் மீதி இருக்கட்டும்
என் உயிர் அல்ல உன் நினைவு !
என்ன செய்ய உன்னை பிரித்து எடுக்க முயன்றேன்
முடியவில் என்னால் ,
மொத்தமும் நீ மட்டும் தான் என்பதால் !

Advertisements

Laptop

என் மடி கணினியே !
உன்னை முடக்கச் சொன்னார்கள் ,
என் மீது அக்கறை கொண்டவர்கள் !
என் மடியில் விளையாடிய முதல் குழந்தையே !
உன்னை முடக்கினால் நான் முடங்கிவிடுவேன்,
என்று அவர்களுக்கு தெரிய வில்லை போல!

ஒரு அன்னையின் ஆதங்கம்

 

இமயத்தை தொட முயற்சி செய்வேன் என்ற சூளுரையை மாற்றி,

இந்த உலகத்தை வெல்ல முயற்சி செய்வேன் என்று கர்ஜனை செய்!

உலகத்தையும் உனக்கு எல்லையாக்க விருப்பமில்லை எனக்கு,

என்ன செய்ய உயிர்களுக்கு உகந்த இடம் இன்றுவரை உலகம் மட்டும் தானே!

வேண்டுமானால் கொஞ்ச காலம் பொறுத்து இருப்போம் ,

வின்ஞானம் வேற்று வழி சொல்லட்டும் உன் புகழை ஏற்றி நிறுத்தலாம் அங்கேயும் !!!!

என்றும் என்னுடன் நீ !!!

என் உயிரே  என்று உரையாடலில் கூட சொல்லப் போவதில்லை,

நீ என் உயிரினும் மேல் என்பதனால்!

என் மரணத்தை கூட உன்னிடம் மறைக்கத் தயங்கமாட்டேன்,

உன் கண்களில் கண்ணீர் சுரக்கும் என்பதனால் !

என் உயிருள்ளவரை நீ என்று உன் நினைவுகளை என் மரணப்படுக்கில் புதைகப்போவதில்லை,

என் அடுத்த பிறவிகளிலும் உன் நினைவுகள் தொடரும் என்பதால்!