எம்மை சூழ கனாக்கண்டேன் !!! எம்மை ஆழ கனாக்கண்டேன் !!!

எம்மை சூழ கனாக்கண்டேன் !!!
எம்மை ஆழ கனாக்கண்டேன் !!!

தேனினும் இனிய சொற்களின் சுவையே !
வானினும் உயர்ந்த மேன்மையின் குணமே !

ஆதவன் ஒளி போல் சுடர்மிகு முகமே !
மாதவன் குழல் போல் இசைத்திடும் குரலே !

ஆழியாய் ஆழ்ந்த மனம் அதன் திடமே !
வேல்வியில் எழுந்த புண்ணியச் சுடரே !

அடக்கிட இயலாத ஆக்கத்தின் மூலமே !
தியாக ரூபமே தாயின் அன்பே !

அனையாய் உறைந்த ஞான கருவூலமே!
பண்டிதர்பலர் தந்த உன்னதக் கல்வியே!

புலவர்பலர் கண்ட பிழையற்ற செய்யுளே !
நன் மாந்தர் போற்றிடும் நயமான உரையே !

நீர் எம்மை சூழ கனாக்கண்டேன் !!!
நீர் எம்மை ஆழ கனாக்கண்டேன் !!!

Advertisements