புதிதாய் உதித்த சூரியன் வேண்டும்!
அதன் முதற் கதிர் என்னை தழுவிட வேண்டும்!!

தினம் தினம் இரவில் பௌர்ணமி வேண்டும்!
அதை தனியாய் நான்மட்டும் ரசித்திட வேண்டும்!!

சிறியதாய் அதிர்ந்திடும் நிலநடுக்கம் வேண்டும்!
அதுநான் துயில்கொள்ளும் தொட்டிலை ஆட்டிவிட வேண்டும்!!

சுற்றியும் ஆயிரம் பூச்செடி வேண்டும்!
அதில் பூக்கள் உடன்சேர்ந்து சிரித்திட வேண்டும்!!

தானே இசைக்கும் கருவிகள் வேண்டும்!
அவை எனக்காக மட்டுமே இசைத்திட வேண்டும்!!

மையிருட்டில் துணையாக விடிவெள்ளி வேண்டும்!
அது விரல்பிடித்து வழிகாட்டி நடந்திட வேண்டும்!!

முதற்பணி நனைத்த புல்வெளி வேண்டும்!
அதில்நான் உறங்கிட தனியாய் தாலாட்டு வேண்டும்!!

Advertisements