பெரியப்பா

மலைபோலல்ல மணல் குவியலாய் கொஞ்சமுண்டு ,
பொருட்செல்வம் உண்டு!
பெரிதாய் வணிகத்தில் வந்ததல்ல,
மழையும் புயலும் வெயிலும் தாண்டி,
மலை வாழைப் பொதியை குதிரையேற்றி ,
மேடும் பள்ளமும் வெள்ளமும் தாண்டி,
வணிகம் செய்து சிறுகச் சேர்த்தது !
மண்ணுக்கு நீரோடு வியர்வை பாட்சி,
பயிர் வளர்த்து சேர்த்த கொஞ்சம் உண்டு !

தன்னலம் பெரிதாய் பார்த்ததில்லை ,
தலைகனம் கொஞ்சமிருந்தால் தவறுமில்லை
குணம் தாராளமாய் வாய்த்ததனால் !
செம்மையை சொல்ல வார்த்தையில்லை ,
அவர் பண்பினை வாழ்த்த வயதுமில்லை !
நன்றாய் பயின்று பட்டம் பெரும் வயது,
அதில் குடும்பப் பொறுப்பு மொத்தமும் சுமந்து,
பிள்ளையாய் உடன்பிறந்த பேரை வளர்த்து,
பெரியதாய் ஆளாக்கி கடமைகள் செய்தவர் !

மலைபோல் மனிதமும்,
மாந்தரிடை செல்வாக்கும் ,
சுனைபோல் வள்ளலும் ,
எளிமையின் உருவும் ,
அணையென நன்னெறியும்,
உருவெனத் திகழும் ஒருவர் !

Advertisements