இதயமெல்லாம் நீதாம்மா!!!

பெரியம்மா…

பத்து மாசம் சுமந்திடல, இருந்தும்
பாசத்தோட பக்குவமா பத்திரமா
பாத்துக்க உன்னமிஞ்ச யாரிருக்கா!

பொறுமையும் எளிமையும், அரவணைப்பும்
தியாகமும், அன்பும் பண்பும்
உருவகமாய் இருந்தயே என்தாயே!

பெருசா படிச்சிடல, இருந்தும்
முழுசா செய்தித்தாள் படிக்காத நாள்தான் விரல்விட்டு எண்ணிடலாம்!

பலகாரம் அரிசிமுறுக்கு, இனிப்புசீட, கோதுமவடன்னு, உன் பதத்தில்
சமச்சிடதான் ஊருக்குள்ள யாரிருக்கா!

வாரத்தில ரெண்டுநாளு, அலமாரி
குழுமியெல்லாம் ஒதுங்கவெச்சு, இடம்மாறி
போனதெல்லாம் சரிசெஞ்சு வைப்பியேம்மா!

சீராக முடிவளர சீயக்காய் அரைப்புவைத்து,
வாழைநார் வேகவைத்து, வெதுவெதுப்பா
தண்ணிவெச்சுக் குளிப்பாட்டி விடுவியேம்மா!

பூச்சடை, முள்ளுசடை, சிலேபிக் கொண்டையின்னு,
விதவிதமா தலைசீவி, அலங்காரம் செஞ்சுவெச்சு அழகுன்னு ரசிப்பியேம்மா!

வயிற்றுவலி, தலைவலின்னோ, கெட்டக்கனவு கன்டாலோ,
தூக்கத்த மறந்துவிட்டு கைகாலப்
பிடிச்சுவிட்டு கதகதப்பா தூங்கவைப்ப!

மூனுமாசத்துக் ஒருமுறை நான்,
வீட்டுக்கு வருவேன்னு, பட்சணங்கள் பலசமைச்சு பாசத்தோட ஆவலாக காத்திருப்பியேம்மா!

கோணாத முகத்தோடு, நாளைக்கு
நூறுபேர் வீட்டுக்கு வந்தாலும்,
காப்பிகொடுத்து உபசரிக்க உணக்கீடு நீதாம்மா!

நீதி நேர்மை நியாயமுன்னு, நெறியோடு
வாழ்தவரின் துணையாக தூணாக
துறவியபபோல தூய்மையாகத் திகழ்தியேம்மா!

சிக்கணமா சேமிச்சு, ஆடம்பரம் அறவேதவிர்து,
பக்குவமா பார்த்துபார்த்து பணிவடைகளெல்லாம்செஞ்சு,
இப்படித்தான் வாழணும்னு வழிகாட்டி நின்றியேம்மா!

இந்த உலகத்துல இடமில்லையின்னு இறைவனே
சொண்ணாலும், எப்பவுமே என்கூட நீயிருப்ப, இதயமெல்லாம் நீதாம்மா!!!

Advertisements