பெரியப்பா

மலைபோலல்ல மணல் குவியலாய் கொஞ்சமுண்டு ,
பொருட்செல்வம் உண்டு!
பெரிதாய் வணிகத்தில் வந்ததல்ல,
மழையும் புயலும் வெயிலும் தாண்டி,
மலை வாழைப் பொதியை குதிரையேற்றி ,
மேடும் பள்ளமும் வெள்ளமும் தாண்டி,
வணிகம் செய்து சிறுகச் சேர்த்தது !
மண்ணுக்கு நீரோடு வியர்வை பாட்சி,
பயிர் வளர்த்து சேர்த்த கொஞ்சம் உண்டு !

தன்னலம் பெரிதாய் பார்த்ததில்லை ,
தலைகனம் கொஞ்சமிருந்தால் தவறுமில்லை
குணம் தாராளமாய் வாய்த்ததனால் !
செம்மையை சொல்ல வார்த்தையில்லை ,
அவர் பண்பினை வாழ்த்த வயதுமில்லை !
நன்றாய் பயின்று பட்டம் பெரும் வயது,
அதில் குடும்பப் பொறுப்பு மொத்தமும் சுமந்து,
பிள்ளையாய் உடன்பிறந்த பேரை வளர்த்து,
பெரியதாய் ஆளாக்கி கடமைகள் செய்தவர் !

மலைபோல் மனிதமும்,
மாந்தரிடை செல்வாக்கும் ,
சுனைபோல் வள்ளலும் ,
எளிமையின் உருவும் ,
அணையென நன்னெறியும்,
உருவெனத் திகழும் ஒருவர் !

Advertisements

பிரிவு !!!

கணவுகள் சொன்ன கதைகள் எல்லாம் ,
கண்களில் தென்பட்ட நாட்கள் எங்கே! – தெரியாமல்,
கடுஞ்சொல் அம்புகள் ஏவியதால்,
கண்ணீர் மட்டும் மிஞ்சியது இங்கே!

சொல்ல வந்த வார்த்தைகள் எல்லாம்,
சொல்லாமல் புரிந்த நாட்கள் எங்கே! – புரியாமல் ,
சொல்லி முடித்த வார்த்தைகளால்,
சோகம் மட்டும் நீள்கிறது இங்கே!

இதழ்கள் பேசிய சொற்கள் எல்லாம் ,
இதயம் சேமித்த நாட்கள் எங்கே! – அறியாமல்,
இளைத்து விட்ட தவறுகளால்,
இடிந்து போன இதயம் இங்கே!

உரசிப் போன நொடிகள் எல்லாம்,
உறைந்து நின்ற நாட்கள் எங்கே! – வேகத்தால்,
உடைந்து விட்ட உறவதனால்,
உருக்குகின்ற வலி தான் இங்கே!

குறைபிரசவம்!

குருதி சிந்தி பெற்ற சுதந்திரம் கொண்டு பிறர்
குருதியை உறிஞ்சும் கொடுமை ஏனோ?

பெண்ணை பேணிகாக்கும் எண்ணம்கொண்ட சுதந்திர நாட்டில்
அவள் பாதுகாப்புக்கு பாதகம் தான் ஏனோ?

ஒற்றுமையாய் இணைந்துவென்ற ஒற்றைலட்சியமம் சுதந்திரத்தை
கூறிட்டு  கொலைசெய்யும் கொடூரம்தான் ஏனோ?

முப்புறமும் கடற்கரையும் மறுபுறத்தில் இமயமும் சூழ்ந்தவளே
ஆழ்பவரும் செழித்து வாழ்பவரும் கறைபடுத்தும்  இமாலயஊழல்கள் ஏனோ ?

அன்பிற்கும் பண்பிற்கும் பிழையல்ல பண்பாட்டிற்கும் பெயர்போனவளே
உன்பிள்ளைகள் பங்காளித்தகராற்றில் நிலதிகும்-நீருக்கும் அடித்துகொள்ளும் அவலம் ஏனோ?

தவமிருந்து பெற்றபிள்ளை சுதந்திரம் அதை குறைமாதத்தில் பிரசவித்தாயோ?
தாயே,  இல்லைக் குறைகளுடன் பிரசவிதாயோ?

தாய் பாசம்தான் மாறிடுமோ!

என் உயிர்நீர் வற்றிடலாம்,
பெருங் கடல்நீர் வற்றிடலாம்,
என் கண்கள் இருண்டிடலாம்,
சுடும் கதிரவன் இருண்டிடலாம்,
என் சுவாசம் நின்றிடலாம்,
வீசும் காற்றும் நின்றிடலாம்,
என் நாடி அடங்கிடலாம்,
சுழலும் பூமி அடங்கிடலாம்,
என் உடலும் சாய்ந்திடலாம்,
உயர் வானமும் சாய்ந்திடலாம்,
என் தோற்றங்கள் மாறிடலாம்,
பெற்றதாய் பாசம்தான் மாறிடுமோ!

 

கனவுகளுக்கு பயப்படாதே !!!

உயரப் பறக்க ஆசைப் படு,
பருந்தை போல அல்ல,
விண்மீனைப் போல!

விரைந்து ஓட ஆசைப் படு,
சிறுத்தைப் போல அல்ல,
புயலைப் போல!

நீண்டு வாழ ஆசைப் படு,
ஆமையைப் போல அல்ல,
பிரபஞ்சத்தைப் போல!

பேரொளி வீசிட ஆசைப் படு,
தங்கத்தைப் போல அல்ல,
கதிரவனைப் போல!

திடமாய்த் திகழ ஆசைப் படு,
யானையைப் போல அல்ல,
இமயத்தைப் போல!

பிறர்கனவுகளின் கதாநாயகனாய்
நாயகியாய் வலம்வரும்
நாள்வரும், காத்திரு!
தூற்றுவோர் தூற்றட்டும்
பேராசை யென்று!
காலம் கைகூடும்,
கனவுகளுக்கு பயப்படாதே !!!

என் இதயத்தை போர்கலமக்கி!!!

என் இதயத்தை போர்கலமக்கி!!!
பார்வையை அம்புகலக்கி
போர்தொடுக்கிறாள் என்மீது,
புன்னகையை அணுகுண்டாகி
வீசிஎரிகிறாள் என்மீது,
இருந்தும் வலிக்கவில்லை என்னிதயதிற்கு
அவளிடம் வீழ்வது தவப்பலனானதால்!!!!